"34 நாட்களில் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள்" - மத்திய சுகாதார அமைச்சர் தகவல்

இந்தியாவில் கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு, 1 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஸ்வர்தன் கூறி உள்ளார்.
34 நாட்களில் 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் - மத்திய சுகாதார அமைச்சர் தகவல்
x
இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர், 34 நாட்களில், 1 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள், சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 62 லட்சம் சுகாதார ஊழியர்கள், 33 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு முறையும், 6 லட்சம் சுகாதார ஊழியர்களுக்கு இரண்டு முறையும் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக அவர் கூறினார். இதனிடையே, அதிகபட்சமாக லடாக்கில் 49 சதவிகித சுகாதார ஊழியர்களுக்கும், தமிழகத்தில் 48 புள்ளி 8 சதவிகித சுகாதார ஊழியர்களுக்கும் ஒரு முறை தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. இதேபோல், டெல்லியில் 46.5 சதவிகிதம், நாகலாந்தில் 38 புள்ளி 6 சதவிகிதம், புதுச்சேரியில் 30 புள்ளி 2 சதவிகித சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 18-ஆம் தேதி அதிகபட்சமாக ஒரே நாளில் 6 லட்சத்து 58 ஆயிரத்து 674 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகவும் சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்