இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கருத்தரங்கு : காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான, ஒற்றுமை முக்கிய பங்காற்றும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கருத்தரங்கு : காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு
x
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே, பொருளாதார தொழில்நுட்ப கருத்தரங்கு காணொலி மூலம் நடைப்பெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றம் காரணமாக மனித இனம் சவால்களை சந்தித்து வருகிறது என கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் கருத்தரங்கின் முக்கிய விவாதப் பொருள் ஒட்டுமொத்த உலகிற்கே பொருத்தமானதாக இருப்பதாக அவர், குறிப்பிட்டார். மறு சுழற்சி மற்றும் மறு உபயோகம் போன்றவை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர், அபாயங்களை எதிர் கொள்வதற்கான திறன் புதிய யோசனை மற்றும் புதுமையான தயார் நிலை மூலமாகவே இளைஞர்களின் சக்தி வெளிப்படுவதாக குறிப்பிட்டார். கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான, வலிமையான கூட்டு முக்கிய பங்காற்றும் என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்