சென்னையில் அமேசான் உற்பத்தி ஆலை

சென்னையில் அமேசான் நிறுவனம் மின்னணு பொருள் உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? அது பற்றி விரிவாக பார்ப்போம்
சென்னையில் அமேசான் உற்பத்தி ஆலை
x
ஆன்லைன் வணிகத்தில் சர்வதேச அளவில் கொடிக்கட்டி பறக்கும் முன்னணி நிறுவனம் அமேசான். ஆன்லைனில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும் இந்த நிறுவனம், சென்னையில் எலக்ட்ரானிக் பொருள் உற்பத்தி ஆலையை  தொடங்க முன்வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் டிவி இல்லாத வாடிக்கையாளர்கள் அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக்கை பயன்படுத்தி வரும் நிலையில், அதற்கான உற்பத்தி ஆலையை சென்னையில் தொடங்குகிறது அமேசான். இதுதான் இந்தியாவில் அமையப்போகும் முதல் அமேசான் உற்பத்தி ஆலை. ஃபயர் ஸ்டிக்கின் தேவையை உணர்ந்தே இந்தியாவில் முதல் ஆலையை அமேசான் திறக்க உள்ளதாகவும், இதன்மூலம் அந்த நிறுவனத்தின் உற்பத்தி பெருகுவதோடு, எலக்ட்ரானிக் சந்தை விரிவடையும் என கருத்து தெரிவிக்கிறார் பொருளாதார நிபுணர் ஷ்யாம் சேகர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமேசான் நிறுவனம் நேரடியாக ஆலையை தொடங்கவில்லை எனவும், சீன நிறுவனமான பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்ய உள்ளதாக கூறும் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், தொடக்கத்தில் வேலைவாய்ப்பு பெருமளவில் இருக்காது என்ற கருத்தை பகிர்கிறார். இந்திய சந்தை மிகப்பெரியது என்பதால், உற்பத்திக்கு ஏற்றபடி, அமேசான் நிறுவனத்தின் பொருள் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில், அந்த நிறுவனம் கூறியவாறு, 2025ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் எனவும் கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

தந்தி டிவி செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் பாலாஜியுடன் டேனியல் ராஜா.

Next Story

மேலும் செய்திகள்