பாஸ் டேக் - ஒரே நாளில் ரூ.87.16 கோடி வசூல்

பாஸ்டேக் மூலம் ஒரே நாளில் 87 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
பாஸ் டேக் - ஒரே நாளில் ரூ.87.16 கோடி வசூல்
x
சுங்கச்சாவடிகளில் பிப்ரவரி 16ஆம் தேதி பாஸ்டாக் மூலம் 87 கோடியே 16 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி நள்ளிரவு முதல் 630 சுங்கச்சாவடிகளிலும் பணபரிவர்த்தனையின்றி பாஸ்டாக் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், இதனால் ஒரே நாளில் 2 லட்சத்தி 50 ஆயிரம் பாஸ்டாக்குகள் விற்பனையானதாக அரசு தெரிவித்துள்ளது. பிப்ரவரி 16ஆம் தேதி 55 லட்சத்தி 48 ஆயிரம் பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறியுள்ள மத்திய அரசு, மொத்த வருவாயில் 87 சதவீதம் பாஸ்டாக் மூலம் வசூலிக்கப்பட்டதாகவும், விரைவில் 90 சதவீதம் எட்டும் என கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்