முதியோர் காப்பகத்தில் மலர்ந்த காதல் - கைகோர்த்த 58 வயது ஆண் : 65 வயது பெண்
பதிவு : பிப்ரவரி 16, 2021, 09:04 AM
காதலர் தினத்தன்று, கேரளாவில் உள்ள காப்பகம் ஒன்றில், முதியோர் இருவர் திருமணம் செய்துள்ளனர். அதைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....
கணக்கற்ற தடைகளை தகர்த்தெறிந்துவிட்டு மலர்வதுதான் காதல்.... அத்தகைய சிறப்புமிக்க காதலுக்கு வயது மட்டும் தடையாகிவிடுமா என்ன?... கேரளாவில் உள்ள முதியோர் காப்பகத்தில் காதலர் தினத்தன்று, அரங்கேறி உள்ள ருசிகர சம்பவம், காதலுக்கு மொழி, இனம், வயது என எதுவும் தடையாகிவிடாது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது.... திருச்சியை சேர்ந்த 58 வயதான ராஜன் என்பவர், சபரிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில், சமையல் வேலை செய்து வந்துள்ளார். 

திருமணம் ஆகாத இவர், தனது வருவாயை, சொந்த ஊரில் உள்ள சகோதரிகளுக்கு வழங்கி, வாழ்ந்து வந்த நிலையில், கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து, அடூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவரைப்போல், மண்ணடி பகுதியை சேர்ந்த, வாய் பேச இயலாத, 65 வயதான சரஸ்வதி என்பவரும், திருமணம் ஆகாமல், அரவணைப்பின்றி தவித்த நிலையில், அதே காப்பகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  காப்பகத்தில் ராஜனும் சரஸ்வதியும், அறிமுகமாகி நண்பர்களாக பழக ஆரம்பித்துள்ளனர். நாளடைவில் அவர்களின் நட்பு, காதலாக கனிந்து உள்ளது.... 
  
காப்பகத்தில்,  பரஸ்பரம் புரிந்துகொண்ட இருவரும், வயது என்பதை வெறும் எண்ணாக கருதி, காதலில் திளைத்து வந்துள்ளனர்.... இவர்களின் காதலை அறிந்த காப்பக நிர்வாகிகள், காதலர் தினத்தன்றே, ராஜனுக்கும் சரஸ்வதிக்கும் திருமணம் நடத்தி, கரம் சேர வைத்துள்ளனர்.  காப்பகத்தில் எளிய முறையில் நடந்த திருமண விழாவில், இருவரும் கைகோர்த்து, காதலின் முதிர்ச்சியையும், புரிதலையும் உலகுக்கு வெளிக் கொணர்ந்து உள்ளனர்...

தந்தி டிவி செய்திகளுக்காக நாகர்கோவில் செய்தியாளர் பிரசாத்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

346 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

86 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

57 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

22 views

பிற செய்திகள்

5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் - மேற்கு வங்க முதல்வர் மம்தா தொடங்கி வைத்தார்

மேற்கு வங்காளத்தில் 5 ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டத்தை, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.

11 views

பிப். 21: பாஜகவின் ஆலோசனை கூட்டம் - 5 மாநில தேர்தல் குறித்து ஆலோசனை ?

வருகின்ற 21 ஆம் தேதி ஜேபி நட்டா தலைமையில் நடைபெறும் பாஜக கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17 views

சர்ச்சைக்குரிய டூல்கிட் - திஷா ரவி யார்?

விவசாயிகள் போராட்ட ஆதரவு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட் பகிர்ந்ததாக கைது செய்யப்பட்டு இருக்கும் திஷா ரவி யார்? என்பதை தற்போது பார்க்கலாம்..

202 views

வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கை வழக்கு - மத்திய அரசு, வாட்ஸ்அப், பேஸ்புக்-க்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு

வாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

45 views

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு : "இருவரின் வளர்ச்சிக்கு, மக்களிடம் கொள்ளை" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கடந்த 10 நாட்களில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இரு முறை உயர்த்தப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

14 views

சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி கைது - காலிஸ்தான் அமைப்புடன் தொடர்பு உள்ளதா?

விவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.