முதலாளிகளுக்கான அரசு என்போர் பதிலளிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்

ஏழைகளுக்கு எத்தனை திட்டங்களை அறிவித்தாலும், முதலாளிக்காக செயல்படும் அரசு என குற்றம்சாட்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்
முதலாளிகளுக்கான அரசு என்போர் பதிலளிக்க வேண்டும் - நிர்மலா சீதாராமன்
x
ஏழைகளுக்கு எத்தனை திட்டங்களை அறிவித்தாலும், முதலாளிக்காக செயல்படும் அரசு என குற்றம்சாட்டுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.பட்ஜெட் மீதான விவாதம் நடந்துவரும் நிலையில், மேம்பாடு, வளர்ச்சி மற்றும் சீர்திருத்தம் ஆகியவை மத்திய பட்ஜெட்டில் உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.பொருளாதார அறிஞர்கள், நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசித்து, அவர்களின் கருத்துக்களை ஒருங்கிணைத்து மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக கூறினார்.800 மில்லியன் மக்களுக்கு கொரோனா காலகட்டத்தில் இலவச உணவு தானியங்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் நேரடியாக பணம் உள்ளிட்டவை வழங்கியுள்ளதாக கூறிய நிர்மலா சீதாராமன்,2 புள்ளி 76 கோடி பேருக்கு சௌபாக்கியா திட்டத்தின் கீழ் மின் வசதி, பிரதமர் யோஜனா திட்டம் மூலம் 11 ஆயிரத்து192 கிலோ மீட்டர், சாலை அமைத்துள்ளோம் என்றார்.முத்ரா திட்டம் திட்டத்தில் பயனடைந்தோர், முதலாளிகள் அல்ல என்ற நிர்மலா சீதாராமன், 11 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மான் திட்டம் மூலம் பணம் வழங்கியதாக கூறினார்.பொது முடக்கக் காலத்தில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான 12 சதவீத தொகையை அரசே செலுத்தும் திட்டத்தின் மூலம் 38 லட்சம் போர் பயனடைந்துள்ளனர் என்ற நிர்மலா சீதாராமன்,முதலாளிகளுக்கான அரசு என தங்களை விமர்சிப்போர், இதற்கு பதிலளிக்க வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்