ஒரு அங்குலம் நிலம் கூட விட்டு தர மாட்டோம் - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என மாநிலங்கள​வையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒரு அங்குலம் நிலம் கூட விட்டு தர மாட்டோம் - ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
x
ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என மாநிலங்கள​வையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லை பிரச்சினை தொடர்பாக மாநிலங்களவையில்  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளக்கம் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கிழக்கு லடாக்கில் உள்ள பேங்காங் சோ பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா, சீனா சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார். 

எல்லைப்பகுதியில் அமைதியான சூழல் நிலவ இந்தியா உறுதி பூண்டுள்ளதாகவும்,  எந்தக் கட்சியை  சேர்ந்தவராக இருந்தாலும், தேசப் பாதுகாப்பு என்று வரும் போது ஒட்டு மொத்த தேசமே ஒன்று பட்டு நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இரு நாடுகள் இடையே நிலவி வரும் பிரச்சனைகள், பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காணப்படும் என சீனாவிடம் இந்தியா உறுதி அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

கடந்தாண்டு லடாக் பகுதியில் சீன அத்துமீற முயன்றபோது எல்லைப் சீனாவுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர்,  சீனா அதிக அளவில் படைகளைக் குவித்ததை இந்தியா கடுமையாக எதிர்ப்பதாக குறிப்பிட்டார்.

இந்திய எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அனைத்து உராய்வு பகுதிகளிலும் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என தெள்ளத்தெளிவாக சீனாவிடம் தெரிவித்ததாக ராஜ்நாத் சிங் கூறினார். 

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இரு நாடுகளும் மதிக்க வேண்டும் என்றும், மீண்டும் முந்தைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார். 

ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என மாநிலங்கள​வையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்