உத்தரகாண்ட் வெள்ளம் - தகிக்கும் தபோவான் சுரங்கம்
பதிவு : பிப்ரவரி 11, 2021, 12:07 PM
அள்ள அள்ள வழிந்து வரும் சேறு, சகதிக்கு மத்தியில் 37 பேரை மீட்க உயிரை பணயம் வைத்து போராடி வருகிறது இந்திய ராணுவம்
அள்ள அள்ள வழிந்து வரும் சேறு, சகதிக்கு மத்தியில் 37 பேரை மீட்க உயிரை பணயம் வைத்து போராடி வருகிறது இந்திய ராணுவம்...  தபோவான் சுரங்கத்தில் நடப்பது என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஞாயிறு அன்று பனிப்பாறைகள் சரிந்து தாலி கங்கா, அலக்நந்தா ஆறுகளில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. 
 
பெருவெள்ளத்தில் பாறைகள், கற்கள் அடித்துவரப்பட்டது. இதில் தாலி கங்கா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தபோவான் மற்றும் ரிஷிகங்காவில் நீர் மின்நிலைய அணைகள் அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றின் ஆக்கோஷத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணைகள் இடிபாடுகளாக கிடக்கின்றன.

இந்த கோரச் சம்பவத்தில் 32 பேர் உயிரிழப்பு வெள்ளத்தில் சிக்கிய 193 பேர காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது. தபோவான் சுரங்கம் பகுதியில் மொத்த மீட்பு படைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. நீர்மின் நிலைய அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்ற 2 சுரங்கங்கள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

அவற்றில் ஒரு சுரங்கத்தின் பணி சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு முடிந்துள்ளது. ஞாயிற்று கிழமை இந்த சுரங்கப்பகுதியில் தொழிலாளர்கள் பணியாற்றிய போதுதான் வெள்ளம் நேரிட்டது. குப்பை கூழங்களுடன் சேறும் சகதியுமாக வெள்ளம் சுரங்கத்திற்குள் புகுந்துவிட்டது

 சில மணி துளிகளில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளிருந்தவர்கள் சுதாரித்துகொண்டு வெளியே ஓடிவர முடியவில்லை... அங்கேயே சிக்கிக்கொண்டனர். தற்போது சுரங்கத்திற்குள் சுமார் 37 பேர் வரையில் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 
ஏற்கனவே சுரங்கத்தில் இருந்து சிலர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்டுவிடலாம் என அதிதீவிரமாக மீட்பு பணி நடக்கிறது. அள்ள அள்ள வரும் சேறும் சகதிக்கும் மத்தியில் அவர்களுடைய போராட்டம் இரவும் பகலுமாக நடந்து வருகிறது

இந்தோ - திபெத்திய எல்லைப் படையினர், மத்திய, மாநில பேரிடர் படையை சேர்ந்தவர்கள் என சுமார் 1000 வீரர்கள் துளிநேர உறக்கமின்றி சேறுகளை அகற்றி வருகிறார்கள்...

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

314 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

38 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

24 views

பிற செய்திகள்

பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் - அதன் முக்கிய அம்சங்கள் என்ன?

பிரதான துறைமுகங்கள் ஆணைய மசோதா மாநிலங்களவையில் நிறைவேறி உள்ள நிலையில், அதன் முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்

1 views

எல்.ஐ.சி. பங்குகளை விற்க முடிவு; மத்திய அரசின் முடிவால் யாருக்கு லாபம்?

எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதனால் யாருக்கு சாதகம், யாருக்கெல்லாம் பாதகம் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு

40 views

கடும் குளிரில் ராணுவ பயிற்சி - பனிச்சறுக்கில் ஈடுபட்ட வீரர்கள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்மார்க் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி பள்ளியில் ராணுவ வீரர்களுக்கு பனிச்சறுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது,.

6 views

குறிப்பிட்ட கணக்குளை முடக்க கூறிய மத்திய அரசு - மறுப்பு தெரிவித்த டிவிட்டர் நிறுவனம்

விவசாயிகள் போராட்டங்கள் பற்றிய சர்ச்சைக்குரிய டிவிட்டர் கணக்குகளை தடை செய்ய மத்திய அரசு விடுத்த கோரிக்கையை டிவிட்டர் நிறுவனம் நிராகரித்துள்ளது.

7 views

ஐ.என்.எஸ். விராட்டை உடைக்க இடைக்கால தடை - உச்சநீதிமன்றம்

ஐ.என்.எஸ். விராட் விமானம் தாங்கிய போர்க்கப்பலை உடைப்பதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

7 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.