எல்.ஐ.சி. பங்குகளை விற்க முடிவு; மத்திய அரசின் முடிவால் யாருக்கு லாபம்?

எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதனால் யாருக்கு சாதகம், யாருக்கெல்லாம் பாதகம் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு
எல்.ஐ.சி. பங்குகளை விற்க முடிவு; மத்திய அரசின் முடிவால் யாருக்கு லாபம்?
x
எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், இதனால் யாருக்கு சாதகம், யாருக்கெல்லாம் பாதகம் என்பதை அலசுகிறது இந்தத் தொகுப்பு.... 

பெருநிறுவனங்களின் படையெடுப்பால், தலைநகர் சென்னை தோறும் கட்டிடங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால், அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுப்பப்பட்ட எல்.ஐ.சி. கட்டிடம், இன்றும் சென்னையின் அடையாளமாக நிற்கிறது. 

வெறும் உயரத்திற்காக மட்டுமின்றி, நம்பகத்தன்மையாலும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்.ஐ.சி., முக்கியத்துவம் பெறுகிறது.   

1956ம் ஆண்டு மும்பையை தலைமையிடமாகக் கொண்டு, 5 சதவீத பங்குகளை, 5 கோடி ரூபாய் முதலீட்டுடன் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., தற்போது 29 கோடி பாலிசிதாரர்களை வைத்துள்ள மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது. 

இந்த சூழலில், எல்.ஐ.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை, மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. இதனால், ஒரு சிலர் மட்டுமே பயனடைய முடியும் என்றும், மோசமான விளைவுகளை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அகில இந்திய இன்சூரன்ஸ் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். குறிப்பாக, எல்.ஐ.சி. மீதான நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மேலும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் செயல்படும் மாஸ் பேங்கிங் என்ற அந்தஸ்தை இழந்து, தனிநபர் வருமானத்திற்கு ஏற்றபடி மாறக்கூடிய கிளாஸ் பேங்கிங் என்ற தரத்திற்கு மாறிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

24 ஆண்டுகளில் 25க்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் உருவாகி இருந்தாலும், எல்.ஐ.சி. மட்டுமே தங்களது பணத்தை என்ன செய்கிறது என வெளிப்படையாக அறிவித்து வருவதாக கூறும் பாலிசிதாரர்கள், அரசின் முடிவு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகிறார்கள்.

5 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம், தொடங்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நஷ்ட கணக்கே காட்டாதது மிகப்பெரிய சாதனை. 
அதன், எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பொதுமக்களின் குரலாக இருக்கிறது.

இதுவரை நஷ்டத்தை காரணம் காட்டி பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்றுவந்த மத்திய அரசு, எல்.ஐ.சி.யின் பங்குகளை விற்க முடிவு செய்திருப்பது பல்வேறு கேள்விகளுக்கு வழிவகுத்திருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்