ஐஐடியில் ஓபிசி இடஒதுக்கீடு நீக்கப்படவில்லை - ஜோதிமணி எம்.பி. கேள்விக்கு அமைச்சர் பதில்
பதிவு : பிப்ரவரி 10, 2021, 08:24 AM
நீட், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் ஓ.பி.சி. பிரிவில் இட ஒதுக்கீடு நீக்கப்படவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சர் கிருஷ்ணன் பால் விளக்கம் அளித்துள்ளார்.
நீட், ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் ஓ.பி.சி. பிரிவில் இட ஒதுக்கீடு நீக்கப்படவில்லை என சமூக நீதித்துறை இணையமைச்சர் கிருஷ்ணன் பால் விளக்கம் அளித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக, ஐஐடி, ஐஐஎம் நிறுவனங்களில் ஓபிசி பிரிவில் இடஒதுக்கீடு நீக்கப்பட்டுள்ளதா என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.


மின் உற்பத்தி திட்டங்களை தொடங்குவதற்கு, பல்வேறு தீவுகளை சீனாவுக்கு இலங்கை வழங்கியதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில், அவர் இதனை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், டெல்லியில் போராடும் விவசாயிகளை போராட்ட ஜீவிகள் என்று பிரதமர் மோடி அழைப்பது, அவர்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்று திருமாவளவன் கண்டித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் பொறுப்பாகும் என திருமாவளவன் எம்.பி. கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார். தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, குற்றவியல் சட்டத்தில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளதையும், பாலியல் வழக்குகளை 2 மாதங்களில் முடிக்க வேண்டும் என்ற விதிகள் இருப்பதை சுட்டிக்காட்டி மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 108 அகதிகள் முகாமில் மொத்தம் 58,843 இலங்கை தமிழர்கள் வசித்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார். இலங்கை அகதிகள் எண்ணிக்கை குறித்து மக்களவை உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், முகாம்களை தவிர்த்து காவல் துறை அனுமதியுடன் 34,134 பேர் அகதிகளாக வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவில் உள்ள முகாவில் 58 பேர் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான நிதியை வீடு ஒன்றுக்கு 3 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய அவர், தலித் சமூகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மேக்நாத் சாஹாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்றும், விழுப்புரத்தில் சைனிக் பள்ளி, ஏகலவ்யா பள்ளி துவங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

எஸ்.சி, எஸ்.டி இடஒதுக்கீட்டு உரிமையை அடிப்படை உரிமையாக மாற்ற சட்டத் திருத்தம் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளதா என ரவிக்குமார் எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இட ஒதுக்கீடு அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் கூறி வரும் நிலையில், அதனை பாதுக்காக அரசு நடவடிக்கை எடுத்தது  குறித்து ரவிக்குமார் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சமூக நீதித்துறை அமைச்சர் ரட்டன்லால் கட்டாரியா, பதவி உயர்வில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

518 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

49 views

பிற செய்திகள்

பெற்ற மகன்களை நரபலி கொடுக்க முயன்ற தாய் - தாயின் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம்

ஈரோடு அருகே பெற்ற மகன்களையே, தாய் நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

104 views

அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் - ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

14 views

ஆட்டோ: கார் நேருக்கு நேர் மோதல் - சிறுவன் உட்பட இருவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், போடி அருகே நிகழ்ந்த கொடூர விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

21 views

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம்

புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

13 views

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

47 views

கொரோனா பரவல் அதிகரிப்பு : கொடிசியாவில் சிறப்பு சிகிச்சை மையங்கள் - பெண்களுக்கு 80 படுக்கை வசதியுடன் தனி வார்டு

கோவையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கூடுதலாக சிறப்பு சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.