ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு

ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கூடாது என முன்னாள் துணைவேந்தர் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.
ராமர் பாலத்தை புராதன சின்னமாக அறிவிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் மனு
x
ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிக்கக் கூடாது என முன்னாள் துணைவேந்தர் ராமசாமி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளார்.

அழகப்பா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ராமர் சேது பாலம் பயன்பட்டுக்காக கட்டப்பட்டவை அல்ல என விளக்கம் அளித்துள்ளார். அவை கால நிலை மாற்றத்தில் ஏற்படும் மணல் திட்டுகள் மட்டுமே எனக் குறிப்பிட்டுள்ள அவர், ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோரின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  
மேலும், நாட்டின் எல்லை சார்ந்த பிரச்சனைகளில்  தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்பதால், சுப்பிரமணியன்சாமி மனுவை நிராகரிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்