உத்தரகாண்டில் நடந்தது என்ன...?

மீண்டும் இயற்கை பேரிடர் உயிர்பலியை வாங்கியிருக்கும் நிலையில், உத்தரகாண்டில் நடந்தது என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்
உத்தரகாண்டில் நடந்தது என்ன...?
x
மீண்டும் இயற்கை பேரிடர் உயிர்பலியை வாங்கியிருக்கும் நிலையில், உத்தரகாண்டில் நடந்தது என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

கேதார்நாத், பத்ரிநாத், ஹரிதுவார், ரிஷிகேஷ் என பல்வேறு ஆன்மீக தலங்கள் சங்கமிக்கும் மாநிலம் உத்தரகாண்ட்.  இதனாலேயே தேவபூமி என்று அழைக்கப்படுகிறது. 
 
ஆனால் தற்போது மேக வெடிப்பு, மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பனிப்பாறைகள் வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களால், உத்தரகாண்ட் மாநிலம் அறியப்படுவது வேதனையான விஷயம்.

மாநிலத்தில் 2013-ல் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கொட்டிய மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 6 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்தனர். 2004 சுனாமிக்கு பின்னர் இந்தியா எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை சீற்றம் இது. 

இந்நிலையில் மாநிலம் தற்போதும் பெரிய அளவிலான இயற்கை பேரிடரை எதிர்கொண்டுள்ளது. 

இம்முறை, உத்தரகாண்டில்  பனிப்பாறைகள் உடைந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கஞ்சன்சங்கா சிகரத்திற்கு அடுத்ததாக, இந்தியாவின் 2 ஆவது மிகப்பெரிய சிகரம் நந்தா தேவி சிகரம்.

25 ஆயிரத்து 643 அடி உயரம் கொண்ட இந்த சிகரம் இமயமலைதொடரில் கர்வால் பகுதியில் உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ரிஷிகங்கா பள்ளத்தாக்கில் இருந்து கோரிகங்கா வரையில் 7 பனிமலைகளை கொண்டது இந்த சிகரம்

இங்கிருக்கும் பனிப்பாறைகள் மெல்ல உருகி தண்ணீராக ஓடும் ஆறுதான் தாலி கங்கா. இந்த ஆறு பின்னர் அலக்நந்தா ஆற்றுடன் இணைகிறது. தற்போது இந்த இரு ஆறுகளில்தான் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

நந்தா தேவி சிகரத்தில் பனிப்பாறைகள் உடைந்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது . பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக ஆற்றில் நீர்மட்டம் சட்டென உயர, வெள்ளை கரைபுரண்டு ஓடியது

அப்படி வரும் வழியில் தபோவான் மற்றும் ரிஷிகங்கா நீர்மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கான நீர்நிலையங்களில் வழியாக பெருக்கெடுத்த வெள்ளம், பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் இரு நீர்மின்நிலையங்களிலும் பணியாற்றிய தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்