உத்தரகாண்டில் திடீர் வெள்ளம் - பனிப்பாறை வெடிப்பால் வெள்ளம்

உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 170 பேர் வரை அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என மாநில பேரிடர் மேலாண்மை அச்சம் தெரிவித்துள்ளது.
உத்தரகாண்டில் திடீர் வெள்ளம் - பனிப்பாறை வெடிப்பால் வெள்ளம்
x
உத்தரகாண்டில் பனிப்பாறைகள் வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 170 பேர் வரை அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என மாநில பேரிடர் மேலாண்மை அச்சம் தெரிவித்துள்ளது. 

சமோலி மாவட்டத்தில் ஜோஷிமத் மலைப்பகுதியில் பனிப்பாறைகள் வெடித்து உருகியதில் தவுலிகங்கா ஆறுகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மலைப்பகுதியில் நீர்மின் திட்டத்திற்காக கட்டப்பட்ட கட்டமைப்பை உடைத்து, கிராமங்களுக்குள் வெள்ள நீர் பாய்ந்ததில் 170  பேர் வரை அடித்து செல்லப்பட்டிருக்க கூடும் என மாநில பேரிடர் மேலாண்மை அச்சம் தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு பணியில் இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வரும் நிலையில், சுரங்கத்தில் சிக்கி தவித்த 16 தொழிலாளர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 7 பேரின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்