'சக்கா ஜாம்' போராட்டத்தை நடத்திய விவசாயிகள் - நாட்டின் பல பகுதிகளில் மறியல் போராட்டம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சக்கா ஜாம் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சக்கா ஜாம் போராட்டத்தை நடத்திய விவசாயிகள் - நாட்டின் பல பகுதிகளில் மறியல் போராட்டம்
x
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சக்கா ஜாம் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி முழக்கங்களை எழுப்பிய அவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் உள்ள எலஹன்கா காவல்நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். மேலும் ராஜஸ்தான் மற்றும் ஹரியானவின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டத்தை நடத்தினர்.

"போராட்டத்தில் அப்பாவி இளைஞர்கள் கைது"

டெல்லியில் கைதான அப்பாவி பஞ்சாப் இளைஞர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசிடம் முதல்வர் அம்ரீந்தர் சிங் வலியுறுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ராத் கவுர் வலியுறுத்தியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு பஞ்சாப் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு உள்ளதாக தெரிவித்தார். குடியரசு தினத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அப்பாவி இளைஞர்கள் கைதானதாக கூறிய ஹர்ஷிம்ராத் கவுர், அவர்களை விடுவிக்க எடுத்த நடவடிக்கை என்ன என பஞ்சாப் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம் - பாதுகாப்பு வளையத்திற்குள் டெல்லி

விவசாயிகளின் சக்கா ஜாம் போராட்டம் நடத்துவதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர். பதற்றமான பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது. ஆளில்லா குட்டி விமானங்களுக்கும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

விவசாயிகள் போராட்டம் - ராகுல் ஆதரவு : நாட்டின் நலனுக்காகவே போராட்டம்

 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகள், விவசாய கூலிகளுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசத்திற்கு ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளார். 

குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழா - காணொலி காட்சி வாயிலாக பிரதமர் பங்கேற்பு

குஜராத் உயர்நீதிமன்ற வைரவிழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துக்கொண்டார். விழாவில் நீதிமன்ற நினைவு தபால் தலையை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், இந்திய நீதித்துறை அரசியலைமைப்பை வலுப்படுத்த ஆக்கப்பூர்வமாகவும் நேர்மையாகவும் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும், மக்களின் உரிமையை பாதுகாத்தல், தேசிய நலனுக்கு முன்னுரிமை வழங்குதல் என எந்த சூழலிலும் தனது கடமையை சிறப்பாக செய்வதாக பிரதமர் கூறினார்.

பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முக்கியம் : இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

முன்பைவிட கொரோனாவுக்கு பிறகு இந்தியாவில் மாற்றம் அதிகம் காணப்படுகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது ஆரோக்கியம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றும் அதனால்தான் அரசு பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், வரும் ஆண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவதே அரசின் இலக்கு எனவும் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்