பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்
x
பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மந்தன் 2021 நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துக்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று 384 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய்  முதலீடு செய்துள்ளதாக கூறினார். பாதுகாப்பு உற்பத்தி துறையில் புதியதாக நுழையும் ஸ்டார்-அப் நிறுவனங்களுக்கு கூடுதலான ஊக்குவிப்பு தேவையென்பதை உணர்ந்து அரசு செயல்படுவதாக கூறிய அவர், ஏரோ இந்தியா கண்காட்சியில் 45 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் 203 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்