இந்தியாவில் 5-ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததற்கான ஆதாரம் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் 5-ல் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
x
இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததற்கான ஆதாரம் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஒருவருக்கு கடந்த காலத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததா? என்பதை கண்டறிய கோவிட் சுவாச் எலிசா உபகரணம் மூலம் செரோ சர்வே நடத்தப்படுகிறது. 

ஒருவர் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்திருப்பதை அவருடைய உடலில் உருவாகியிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டு கண்டுபிடிக்கலாம். 

இதுபோன்று இந்தியாவில் மூன்றாம் கட்ட ஆய்வு கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரையில் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.

இந்தியா முழுவதும் 21 மாநிலங்களில் 70 மாவட்டங்களில், 700 கிராமங்கள் அல்லது வார்டுகளில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் டாக்டர் பலராம் பார்கவா வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததற்கான ஆதாரம் தெரியவந்துள்ளது.

18 வயதுக்கு மேல் 28 ஆயிரத்து 589 பேரிடம் நடத்தப்பட்ட சர்வேயில் 21.4 சதவீதம் பேருக்குக்கும், 10 முதல் 17 வயதுக்குட்பட்டோரில் 25.3 சதவீதம் பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் 31.7 சதவீதத்தினருக்கும், குடிசைகளற்ற பகுதிகளில் 26.7 சதவீத்தினரும், கிராமப்புறங்களில் 23.4 சதவீதத்தினருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 60 வயதுக்கு மேற்பட்டோரில் 23.4 சதவீதம் பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என கூறியிருக்கிறார்.


மேலும், 7,171 சுகாதார பணியாளர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில்  25.7 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தற்போது நாட்டில் பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்