மத்திய அரசின் ஸ்கிராப்பேஜ் பாலிசி - பலன் தருமா?

15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களை, பயன்பாட்டில் இருந்து நீக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் ஸ்கிராப்பேஜ் பாலிசி - பலன் தருமா?
x
இணையத்தில் மட்டும் பார்த்து வந்த இந்த காட்சிகளை நாம் இனி நேரிலேயே பார்க்க உள்ளோம்.  வெளிநாடுகளில் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்யும் நடைமுறை இனி இந்தியாவிலும் நடக்கப்போகிறது. இதற்கான திட்டத்தை தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.  அதன்படி வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் வாகனங்கள் 15 ஆண்டுகளையும், தனிநபர் பயன்படுத்தும் வாகனங்கள் 20 ஆண்டுகளையும்  கடந்துவிட்டால் அதற்கு தரச்சான்று பரிசோதனை நடத்தப்பட்டு அழிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையப்படுத்தியே இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.

இந்த திட்டம்  சுற்றுச்சூழலுக்கு நன்மையை கொடுத்தாலும் சாமானிய மக்களுக்கு பாதிப்பைதான் தரும் என்கின்றனர் பொதுமக்கள் சிலர்.. ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற நிறுவனங்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தங்களுக்கு மத்திய அரசின் புதிய திட்டம் மேலும் சுமையை கொடுக்கும் என்கிறார் ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர். காற்று மாசு தான் பிரச்சினை என்றால் பழைய வாகனங்களின் இன்ஜின்களை மட்டும் மாற்றினால் போதுமே என்பது லாரி உரிமையாளர்களின் யோசனையாக இருக்கிறது. பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு சலுகைகளை அளித்தால் வாகன உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து சாமானியர்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

தந்தி செய்திகளுக்காக, ஒளிப்பதிவாளர் மணிகண்டனுடன், செய்தியாளர் சசிதரன்...

Next Story

மேலும் செய்திகள்