13 வது சர்வதேச விமான கண்காட்சி - சீறிப் பாய்ந்து ஹெலிகாப்டர்கள் சாகசம்

கர்நாடக மாநிலம் பெங்களூரூவில், 13 - வது ஏரோ இந்தியா சர்வதேச விமானக் கண்காட்சியை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார்.
13 வது சர்வதேச விமான கண்காட்சி - சீறிப் பாய்ந்து ஹெலிகாப்டர்கள் சாகசம்
x
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில், 13 - வது ஏரோ இந்தியா  சர்வதேச விமானக் கண்காட்சியை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்தார். 

பெங்களூரூவில் உள்ள ஏலஹங்கா விமானப்படை தளத்தில்  தொடங்கி உள்ள இந்த கண்காட்சி, வரும் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் மிக் 17 ரக ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமடித்து அணிவகுத்துச் சென்றது. விமான கண்காட்சியில் இந்திய விமான படைக்கு சொந்தமான சாரங்க் ஹெலிகாப்டர்கள்,  சூரிய கிரண் விமானங்கள், டகோடா, சுகோய், ரபேல், எல்சிஎச், எல்யூஎச், ஜாக்வர், ஹாக், பைட்டர் ஜெட், ஏர்கிராப்ட் ஹெலிகாப்டர்கள் சாகசம் செய்கின்றன.  ஆத்மநிர்பர் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஃப்ளை பாஸ்ட் விமானங்கள், வானில் சாகசம் செய்து காட்டின.

Next Story

மேலும் செய்திகள்