4 மாநிலங்களுக்கு, பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்பு
பதிவு : பிப்ரவரி 01, 2021, 09:33 PM
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு திட்டங்களை  நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

பட்ஜெட் உரையின் போது  தமிழ்நாட்டில் ரூ.1.03 லட்சம் கோடி முதலீட்டில் 3500 கி.மீ தூர தேசிய நெடுஞ்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை-கொல்லம் சாலை மற்றும் சித்தூர்-தாட்சூர் சாலை ஆகியவை அடங்கும். அடுத்த ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அறிவித்தார்.

சென்னையில் 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மெட்ரோ ரயிலின், 2 வது கட்ட திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம், பரதீப் மற்றும் பெட்டுகாட் ஆகிய 5 முக்கிய மீன்பிடித் துறைமுகங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக உருவாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

மும்பை-கன்னியாகுமரி நடைபாதையின் 600 கி.மீ உள்பட 65 ஆயிரம் கோடி ரூபாய், முதலீட்டில் கேரள மாநிலத்தில் ஆயிரத்து 100 கி.மீ தேசிய நெடுஞ்சாலை பணிகளை அறிவித்தார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய், செலவில் கொல்கத்தா-சிலிகுரி சாலை மேம்படுத்துதல் உட்பட 6 ஆயிரத்து 700 கி.மீ நெடுஞ்சாலை பணிகளை பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

அசாம் மாநிலத்தில் தற்போது 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடந்து வருவதாக சீதாராமன் தெரிவித்தார். (gfx in 8 ) அடுத்த மூன்று ஆண்டுகளில் அசாம் மாநிலத்தில் ஆயிரத்து 300 கி.மீ க்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய திட்டங்கள் 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், மேற்கொள்ளப்படும் என்றும், நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

400 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

220 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

58 views

பிற செய்திகள்

"வாங்க மோடி... வணக்கங்க மோடி..." கோவை வந்த மோடியை வரவேற்ற பாஜகவின் பாடல்

"வாங்க மோடி... வணக்கங்க மோடி..." கோவை வந்த மோடியை வரவேற்ற பாஜகவின் பாடல்

18 views

கவலையில் மூழ்க வைத்த மழை... விவசாயிகளின் போதாத காலம்!

அடுத்தடுத்த மழை பாதிப்புகளால் மீண்டு வர முடியாமல் கடலூர் மாவட்ட விவசாயிகள் தவித்து வருகின்றனர். அவர்களின் பரிதவிப்பை விளக்கும் செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...

42 views

ரூ.12,400 மதிப்பு திட்டங்களுக்கு அடிக்கல்

நெய்வேலியில் 2 அனல் மின் நிலையங்கள், மதுரை, திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

62 views

ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி, பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

விழுப்புரம்-நாகை இடையே இரண்டாயிரத்து 426 கோடி ரூபாய் மதிப்பில் 4 வழிச்சாலை பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

22 views

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60-ஆக உயர்த்தி உத்தரவு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

186 views

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

158 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.