டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு - பின்னணியில் யார்?

டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்தில் இதுவரையில் நடந்தவை என்ன என்பதை பார்க்கலாம்.
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு - பின்னணியில் யார்?
x
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்தில் இதுவரையில் நடந்தவை என்ன என்பதை பார்க்கலாம்.

டெல்லியில் பாதுகாப்பு நிறைந்த இஸ்ரேல் தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை வெடிகுண்டு வெடித்தது.

நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 4 கார்கள் சேதம் அடைந்தன. 

இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசின் சிறப்பு படை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் போலீசார், தேசிய புலனாய்வு பிரிவு மற்றும் தேசியப் பாதுகாப்பு படை குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த விவகாரத்தில் டெல்லி போலீசுக்கு தேவையான உதவியை செய்யுமாறு அனைத்து உளவுத்துறை பிரிவுக்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

சக்தி குறைவான கண்ணி வெடிகுண்டு வெடித்துள்ளது என்பதும், 25 மீட்டர் சுற்றளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 காரிலிருந்து இறங்கிய இருவர் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு நடந்து செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, குறிப்பிட்ட கார் டிரைவரை அடையாளம் கண்டு அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், இருவரின் வரைபடத்தை வெளியிட ஆயத்தமாகி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்த சிசிடிவி கேரமாக்கள் செயல்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 

குண்டு வெடித்த இடத்தில் இருந்து இஸ்ரேல் தூதரக முகவரி கொண்ட கடிதம் ஒன்றையும் அதிகாரிகள் எடுத்துள்ளனர். அதில் இது ஒரு டிரைலர்தான் என்ற வாசகம் இடம்பெற்று இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கொல்லப்பட்ட ஈரானிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி மற்றும் ஈரான் அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிஸதே பெயர்கள் தியாகிகள் என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும் தெரியவந்துள்ளது

இதற்கிடையே, விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருக்கும் ஈரானியர்களிடம்  போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.  சமீபத்திய நாட்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டவர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது

குண்டுவெடிப்பு தங்களுக்கு எந்தஒரு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை எனக் கூறியிருக்கும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மால்கா கூறியுள்ளார். 2012 ஆம் ஆண்டு இஸ்ரேலிய அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதை மையப்படுத்தி இக்கருத்தை தெரிவித்து உள்ளார். 

இதற்கிடையே, இதுவரையில் அறியப்படாத ஜெய்ஷ் உல் ஹிந்த் என்ற இயக்கம் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. ஆனால் இது உண்மைதானா என்பது குறித்து டெல்லி சைபர் பிரிவு போலீசார் ஆய்வு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்