கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - நாள்தோறும் 6,000 பேருக்கு புதிதாக தொற்று

கேரளாவில் கொரோனா பரவல் கடுமையான நிலையில், அதை கட்டுப்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - நாள்தோறும் 6,000 பேருக்கு புதிதாக தொற்று
x
கேரளாவில் கொரோனா பரவல் கடுமையான நிலையில், அதை கட்டுப்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கேரளாவில் கொரோனா பரவலின் வேகம் குறையாததன் காரணம் தான் என்ன?

சீனாவின் ஊகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று, கேரளா வழியாக இந்தியாவில் நுழைந்தது. ஊர் திரும்பிய மருத்துவ மாணவியை தொடர்ந்து, இத்தாலியில் இருந்து திரும்பிய தம்பதிக்கும் கொரோனா உறுதியானது. கல்வி பயின்றோர் அதிகம் உள்ள கேரளா, கொரோனா பரவலை தடுக்க துரிதமாக செயல்பட்டது. 

அப்போது, பல்வேறு நாடுகளில் இருந்தும் சொந்த ஊர் திரும்பும் மக்களை தாயுள்ளத்தோடு வரவேற்று உபசரிப்போம் எனக் கூறி அனைவரையும் வரவேற்றது கேரளா. அதில், தொற்றோடு ஊர் திரும்பியவர்கள் அதிகம். அதை தடுக்க முயன்றது அரசு.  

கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், கோவிட் பராமரிப்பு மையம் உள்ளிட்ட பணிகள் முடுக்கி விடப்பட்டாலும், பாதிப்பு எண்ணிக்கை குறையவே இல்லை. 20 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா. 9 லட்சத்தை கடந்த மொத்த பாதிப்பு. 3 ஆயிரத்து 700.ஐ கடந்த உயிரிழப்பு என அடிமேல் அடி. 

கேரளாவில், தொற்றிலிருந்து குணமடைவோரை விட பாதிப்பு எண்ணிக்கை அதிகம் என கூறும் முதல்வர் பினராயி விஜயன், 10 லட்சம் பேரை பரிசோதித்தால், 2 லட்சத்து 67 ஆயிரத்து 648 பேருக்கு கொரோனா உள்ளது என்கிறார்.  

ஒரு வாரத்தில் 42 ஆயிரம் பேருக்கு தொற்று. நாள்தோறும் 6 ஆறாயிரம் பேர் புதிதாக தொற்று என அண்டை மாநிலமான கேரளாவில் வேகமெடுத்து உள்ளது, கொரோனா...

திருவோண பண்டிகை, உள்ளாட்சி தேர்தல், போராட்டம், கோயில் விழா, திருமண நிகழ்வுகளும் தொற்று பரவலுக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. சபரிமலை, குருவாயூர், பத்மநாபசுவாமி கோயில்களின் பூசாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்ட தொற்றும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. பொது போக்குவரத்து, திருமணம் நிகழ்ச்சிகள் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணிகள் எனவும் ஆய்வு கூறுகிறது.

பிப்ரவரி10ஆம் தேதி வரை முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்றலை கண்காணிக்க 25ஆயிரம் போலீசாரை களமிறக்கி உள்ளது, கேரள அரசு.... திருமணம் உள்ளிட்ட மக்கள் திரள் நிகழ்வை திறந்த வெளியில் நடத்தவும், இரவு பயணத்தை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது, கேரள அரசு. 

கண்ணுக்கு புலப்படாத கிருமிதான் என்றாலும், கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்பதை தவிர வேறில்லை.  

Next Story

மேலும் செய்திகள்