கிராமிய சமையல் குழுவுடன் ராகுல் - கவனம் ஈர்த்த ராகுலின் தமிழ் வார்த்தைகள்
பதிவு : ஜனவரி 30, 2021, 09:20 AM
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுல்காந்தி, கிராமிய சமையல் குழுவினருடன் சமைத்து சாப்பிடும் வீடியோ வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுல்காந்தி, கிராமிய சமையல் குழுவினருடன் சமைத்து சாப்பிடும் வீடியோ வெளியாகி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் நாளுக்கு நாள்  சூடுபிடித்து வருகிறது...  இதையொட்டி, தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அண்மையில் பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், "தமிழ் மக்களிடம் இருந்து இந்தியா கற்க வேண்டும்", "தமிழ் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம்", தமிழகத்துடன் தமக்கு இருப்பது குடும்ப உறவு என தமிழகத்தின்  மீதான தனது அளப்பரிய அன்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தேர்தல் பிரசாரத்திற்கு இடையே கிராமத்து சமையலில் கலக்கும் இளைஞர் குழுவை சந்தித்து உரையாடிய ராகுல், 
அவர்களுடன் இணைந்து சமைத்து, மகிழ்ந்த ருசிகர சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்பாக பிரியாணிக்கு ராகுல் காந்தியே தனது கைப்பட தயிர் பச்சடி செய்தார். 

தயிர், கல் உப்பு , ஆட்டு இறைச்சி, நல்லா இருக்கு,  நன்றி என்று தமிழ் வார்த்தைகள் பேசியும் அசத்தியுள்ளார், ராகுல்.

அந்த குழுவினருடன் சகஜமாக கலந்துரையாடி, அவர்களை பாராட்டிய ராகுல், வெளிநாட்டில் சமைக்க வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை அமெரிக்காவில் உள்ள தனது நண்பரிடம் பேசி நிறைவேற்ற முயற்சிப்பதாக கூறினார். 

மேலும், அடுத்த முறை வரும் பொழுதும் தனக்கு ஈசல் ஃபிரை செய்து கொடுக்க வேண்டும் என்று அன்பு கட்டளையும் இட்டுள்ளார், ராகுல்.

இந்த நிகழ்வின் போது ராகுலுடன் தமிழக பொறுப்பாளர் குண்டு ராவ் மற்றும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதி மணியும் உடனிருந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

399 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

208 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

55 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயில் - பொங்கல் வைத்து வழிபட்ட தொண்டர்கள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயிலில் தொண்டர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

51 views

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் - நாராயணசாமி, திருமாவளவன் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

48 views

தோல்விகளிலும் துவளாத தன்னம்பிக்கை தலைவி - தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...

33 views

"திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை : நாளை ஸ்டாலினை சந்திக்கிறேன்" - மூத்த காங்கிரஸ் தலைவர் உம்மன் சாண்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை மேற்கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன்சாண்டி சென்னை வந்துள்ளார்.

33 views

"கொரோனா உயிரிழப்பு குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும்" - தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்

22 views

ஜெயலலிதா படத்திற்கு சசிகலா மரியாதை: ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் - சசிகலா வேண்டுகோள்

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி தொடர, தொண்டர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.