வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 11% இருக்கும்

வரும் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.
வரும் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 11% இருக்கும்
x
வரும் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என, பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். 
பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில், நடப்பு நிதியாண்டின் இறுதியில், இந்திய பொருளாதார வளர்ச்சி மைனஸ் ஏழு புள்ளி ஏழாக சரியக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 
அடுத்த நிதியாண்டில் இது வளர்ச்சி அடையும் என்றும் 2021-22 நிதியாண்டுக்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் மதிப்பீடுகளின்படி, 2021 ம் நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை ஆறு புள்ளி இரண்டுலிருந்து, ஏழு சதவிகிதமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதே போல மாநிலங்களவையிலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்