"மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை" பாலியல் வன்கொடுமை தொடர்பான தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
மும்பை நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை பாலியல் வன்கொடுமை தொடர்பான தீர்ப்பு
x
பாலியல் வன்கொடுமை தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் வினோத தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. 

பெண்களை ஆடைகளுக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை ஆகாது என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை வழங்கிய தீர்ப்பு சர்ச்சைக்குள்ளானது. இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர்  கே.கே.வேணுகோபால், தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில் முறையீடு செய்தார். இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்திய தலைமை நீதிபதி அமர்வு, மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்