கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணமே இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை. அதற்குள் இன்னொரு நடிகை தன் வாழ்வை முடித்துக் கொண்டிருக்கிறார். இதுபற்றிய செய்தித் தொகுப்பு...
கன்னட டிவி நடிகை திடீர் தற்கொலை...ஒரு வருடமாக துரத்தி வந்த தற்கொலை எண்ணம்
x
இவர்தான் ஜெயஸ்ரீ... கன்னடப் படங்களில் நல்ல பெயர் வாங்கிய கதாநாயகி. கன்னட சேனலில் வரும் பிக்பாஸ் - சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, கடைக்கோடி கன்னட ரசிகனையும் சென்றடைந்தவர். 
என்னதான் புகழ் வெளிச்சம் இருந்தாலும் சமீபகாலமாக புதிய பட வாய்ப்புகள் எதையும் ஏற்காமல், மிகுந்த மன அழுத்ததில் காணப்பட்டார் ஜெயஸ்ரீ. கடந்த வருடம் ஜூலை 22ஆம் தேதி, " நான் சாகப்போகிறேன்... என்னை தவிக்கவிட்ட உலகத்தினருக்கு நன்றி" என்கிற காட்டமான பதிவினை அவர் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் அதிர்ந்து போன கன்னட திரையுலகினர், ஜெயஸ்ரீயை தொடர்பு கொண்டதும் உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிட்டு, தான் உயிருடன்.. நலமாக இருப்பதாக மற்றொரு பதிவினை வெளியிட்டார். ஜெயஸ்ரீயின் இப்படிப்பட்ட பகீர் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பின. அவர் பப்ளிசிட்டிக்காகத்தான் இப்படியெல்லாம் தற்கொலை நாடகம் போடுவதாக பலரும் பேசினார்கள். அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக, ஜூலை 25ஆம் தேதி பேஸ்புக் லைவ்-ல் தோன்றிய ஜெயஸ்ரீ, "தான் பப்ளிசிட்டிகாக இதை செய்யவில்லை, பிறரிடம் நிதியுதவி பெற வேண்டிய அவசியமும் இல்லை... தன்னிடம் போதுமான பணம் உள்ளது ஆனால் மனநிம்மதியில்லை" என்று மனம் திறந்திருந்தார். தான் சிறுவயது முதலே வஞ்சிக்கப்பட்டிருப்பதாகவும், பிறர் செய்யும் துரோகங்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் அதில் உருக்கமாகப் பேசியிருந்தார்.கடந்த வருடத்தின் கொரோனா ஊரடங்கும் ஜெயஸ்ரீயை முடக்கிப்போட்டது. தொடர்ந்து அதீத மன அழுத்ததில் இருந்ததால் குடும்பத்தினர் அவரை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஜெயஸ்ரீ நிச்சயம் மன அழுத்ததிலிருந்து மீண்டு விடுவாரேன அவர்கள் எதிர்ப்பாத்தது நிறைவேறவில்லை. நேற்று அவரின் செல்போன் எண்ணை பல முறை தொடர்பு கொண்டும் அவர் பதிலளிக்கததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களிடம் தகவல் கொடுத்துள்ளனர். உடனடியாக ஜெயஸ்ரீயின் அறைக்குச் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் ஜெயஸ்ரீ தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழகத்தில் சித்ரா என்றால் கர்நாடகத்தில் ஜெயஸ்ரீ என்று சொல்லும் அளவுக்கு இந்த மரணம் மிகப் பெரும் அதிர்ச்சியையும் விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்