எவரெஸ்ட் சிகரத்தில் சிதறிக் கிடக்கும் குப்பை - குப்பைகள் கைவினைப் பொருட்களாக மாற்றம்

எவரெஸ்ட் சிகரத்தில் கொட்டிக் கிடக்கும் குப்பைகள், கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களாக மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இதைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..
எவரெஸ்ட் சிகரத்தில் சிதறிக் கிடக்கும் குப்பை - குப்பைகள் கைவினைப் பொருட்களாக மாற்றம்
x
8 ஆயிரத்து 848 புள்ளி எட்டு ஆறு அடி... உலகிலேயே உயரமான சிகரம்.... மலையேற்ற வீரர்களின் விருப்பமிகு தேர்வு.நேபாள நாட்டில்,  நிமிர்ந்து நிற்கும் எவரெஸ்ட் சிகரத்தின் சிறப்புகள் கொட்டிக் கிடப்பதுபோல், அங்கு வேறொன்றும் கொட்டிக் கிடக்கிறது.... அவைதான் குப்பைகள்.சமீப காலமாக, எவரெஸ்ட் சிகரம் குப்பை மேடாக மாறி வருகிறது. சிகரத்தில் ஆர்வத்துடன் ஏறும் மலையேற்ற வீரர்கள், அலட்சியமாக வீசிச் செல்லும் குப்பைகளால் எவரெஸ்ட்டின் எழில் சிதைந்து வருகிறது.ஆக்சிஜன் கேன்கள், அறுந்த கயிறுகள், கிழிந்த தார்பாய்கள், உடைந்த பாட்டில்கள், உண்ட உணவின் மிச்சங்கள், இவற்றைதான் மலையேற்ற வீரர்கள், எவரெஸ்ட்டுக்கு அன்பளிப்பாய் அளித்துச் செல்கின்றனர்.ஆனால், இந்த குப்பைகளையும், தங்கள் கைவண்ணத்தால், கலைப்பொருட்களாக மாற்றி வருகிறது அந்நாட்டு அரசு...சாகர்மாதா நெக்ஸ்ட் என்ற திட்டத்தின்கீழ், எவரெஸ்ட் சிகரத்தில் சிதறிக் கிடக்கும் குப்பைகள், தன்னார்வலர்களின் உதவியுடன் சேகரிக்கப்படுகின்றன.இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள், சாகர்மாதா நகரில் உள்ள கிடங்கில், அழகிய கலைநயம் மிக்க பொருட்களாக மறு சுழற்சி செய்யப்படுகின்றன. குப்பைகளில் இருந்து மாற்றம்பெறும் கலைப்பொருட்களை, காட்சிப்படுத்தவும் நேபாள அரசு திட்டமிட்டு உள்ளது.இதேபோல், கேரி மீ பேக் என்ற திட்டத்தின்படி, சிகரத்தில் இருந்து இறங்குபவர்களை1 கிலோ குப்பைகளை எடுத்துவந்து தருமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.என்னதான், அரசு ஆயிரம் முயற்சிகள் எடுத்தாலும், மலையேறும் மனிதர்கள், மனம் மாற வேண்டும். அவர்கள் நினைத்தால் தான், எவரெஸ்ட்டில் குப்பைகள் குறையும்..... 



Next Story

மேலும் செய்திகள்