எல்லையில் கிராமம் அமைப்பு - இந்தியாவை சீண்டும் சீனா

எங்களுடைய எல்லைப்பகுதிக்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்தை அங்கீகரிக்கவில்லை என சீனா, இந்தியாவை சீண்டும் விதமாக கூறியிருக்கிறது
எல்லையில் கிராமம் அமைப்பு - இந்தியாவை சீண்டும் சீனா
x
அருணாச்சல பிரதேச மாநிலம் எல்லைப் பகுதியில் சீனா புதிய கிராமத்தை உருவாக்கியிருப்பது  செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் நாட்டின் இறையாண்மை, நிலப்பகுதிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் குவா சன்யிங், தெற்கு திபெத்தில் சீன எல்லப்பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அருணாச்சல பிரதேசத்தை நாங்க அங்கீகரிக்கவில்லை என இந்தியாவை சீண்டும் விதமாக பதிலளித்துள்ளார். மேலும், முற்றியில் தங்களுடைய இறையாண்மையின்படி எங்களுடைய பகுதியில் கட்டுமானங்களை மேற்கொண்டோம் எனக் கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்