"வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க தயார்" - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லியில் உள்ள விக்யான் பவனில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க தயார் - மத்திய அமைச்சர்  நரேந்திர சிங் தோமர்
x
டெல்லியில் உள்ள விக்யான் பவனில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஏற்கனவே 9 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், தற்போது 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என மத்திய அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார். போராட்டத்தை கைவிடுவது குறித்து உடனே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்நிலையில், மீண்டும் வரும் 22ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், அமைச்சரின் ஆலோசனை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்