ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு பிரதமர் மோடி வாழ்த்து
x
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இருநாட்டு உறவை வலுப்படுத்த பைடனுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக கூறியுள்ளார். உலக அமைதி மற்றும் பாதுகாப்பை பேணிக்காக்க ஒன்றுமையுடன் செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுக்கொண்ட கமலா ஹாரிஸ்க்கும் பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என குறிப்பிட்டுள்ள மோடி, இருநாட்டு உறவை மேம்படுத்துவதற்கு கமலா ஹாரிசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்