ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் : தீவிர விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி

இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டது கிரிமினல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ராணுவ ரகசியங்கள் கசிந்த விவகாரம் : தீவிர விசாரணை வேண்டும் - ராகுல்காந்தி
x
இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு கொடுக்கப்பட்டது கிரிமினல் நடவடிக்கை என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் நடத்திய பாலகோட் தாக்குதல் மற்றும் புல்வாமா பகுதியில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான, ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியின் வாட்ஸ்ஆப் உரையாடல், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, இந்திய ராணுவத்தின் ரகசியங்களை ஒரு பத்திரிகையாளருக்கு கசிய விட்டிருப்பது கிரிமினல் நடவடிக்கை என்றும், தகவல்களை வெளியிட்டவர் மற்றும் பெற்றுக் கொண்டவர் என இரு தரப்பின் மீது வழக்குப்பதிய வேண்டும் எனவும் கூறினார்.பிரதமர், உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள், விமானப்படை தளபதி, தேசிய பாதுகாப்பு அமைப்பிற்கு மட்டுமே, பாலகோட் தாக்குதல் தொடர்பான தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது எனக்கூறிய ராகுல்காந்தி, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்