தட்கல் முறையில் 2 மணி நேரத்திற்குள் சிலிண்டர் டெலிவரி

கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்த 2 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் தட்கல் முறையை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிமுகம் செய்ய உள்ளது.
தட்கல் முறையில் 2 மணி நேரத்திற்குள் சிலிண்டர் டெலிவரி
x
கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்த 2 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யும் தட்கல் முறையை  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிமுகம் செய்ய உள்ளது.  

ஒரு சிலிண்டர் டெலிவரி செய்த 15 நாட்களுக்கு பிறகுதான் அடுத்த சிலிண்டரை புக்கிங் செய்யும் நடைமுறை தற்போது உள்ளது.

மேலும் சிலிண்டரை முன்பதிவு செய்த நாளில் இருந்து அவை வினியோகம் செய்யப்படுவதற்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் முதல் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

ஆனால் தற்போது முன்பதிவு செய்த 2 மணி நேரத்திற்குள்ளாக வாடிக்கையாளரின் வீட்டுக்கு சிலிண்டரை டெலிவரி செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிமுகம் செய்ய உள்ளது. 

ஒரே ஒரு எரிவாயு இணைப்பு கொண்டவர்கள் மட்டுமே இந்த தட்கல் முறை விரைவு சிலிண்டர் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் இந்த திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படவுள்ளது.

தட்கல் முறையில் சிலிண்டர் பெற கூடுதலாக 25 ரூபாயில் செலுத்த வேண்டும் என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்