ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்திற்கு சாலைகள் - சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை

கடந்த 8 ஆம் தேதி முதல் ஒருவார காலத்தில் மட்டும் 534 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைத்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சாதனை படைத்துள்ளது.
ஒரே வாரத்தில் 534 கி.மீ தூரத்திற்கு சாலைகள் - சாலை போக்குவரத்து  அமைச்சகம் சாதனை
x
கடந்தாண்டு ஏப்ரல் முதல் கடந்த 15 ஆம் தேதி வரை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் 8,169 கி.மீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து உள்ளது.நாள் ஒன்றுக்கு சராசரியாக 28.16 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்தாண்டு, இதே காலக் கட்டத்தில் 7,573 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது 596 கிலோ மீட்டர் சாலைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு உள்ளது. நடப்பு  நிதியாண்டின் முதல் 2 மாதத்தில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பணிகள் நடைபெறாத நிலையில்,  தற்போது பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு, ஒரு வாரத்தில் 534 கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது. எஞ்சியுள்ள 2 மாதங்களில் மாதங்களில் சாலை கட்டுமான பணிகளை இன்னும் அதிகரிக்க சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் 11,000 கி.மீ தூரத்துக்கு சாலைகள் அமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இலக்கு நிர்ணயித்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்