"சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு தவறானது" - வராக்கடன்கள் குறித்து அதானி குழுமம் விளக்கம்

அதானி குழுமம் நான்கரை லட்சம் கோடி வராக்கடன் வைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி முன்வைத்த குற்றச்சாட்டை அதானி நிர்வாகம் மறுத்துள்ளது.
சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு தவறானது - வராக்கடன்கள் குறித்து அதானி குழுமம் விளக்கம்
x
ஜனவரி 15ஆம் தேதி ட்விட்டரில் கருத்து பதிவிட்ட சுப்பிரமணியன் சுவாமி, அதானி குழுமம் வராக்கடன்கள் வைத்துள்ளதோடு, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதன் சொத்து மதிப்பு இரட்டிப்பாவதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள அதானி குழுமம், கடந்த 30 ஆண்டுகளாக, ஒரு முறை கூட வராக்கடன்களை ஏற்படுத்தியது கிடையாது எனவும்,  கற்பனைக்கும் எட்டாத வகையில் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சுமத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் தங்கள் நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் நன்மதிப்பை பெற்று சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்