ரூ.17,500 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் - மிகப்பெரிய குறைந்தவிலை வீடுவழங்கும் திட்டம்

இந்தியாவில் ஏராளமான நலத்திட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ரூ.17,500 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் - மிகப்பெரிய குறைந்தவிலை வீடுவழங்கும் திட்டம்
x
குஜராத் மாநிலத்தில் செல்படுத்தப்பட உள்ள அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின்  இரண்டாம் கட்டம் மற்றும் சூரத் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு,பிரதமர் மோடி இன்ற அடிக்கல் நாட்டினார். இந்த இரண்டு திட்டங்களின் மொத்த மதிப்பு சுமார் 17 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டங்கள் மூலம் கொரோனா காலக் கட்டத்திற்கு இடையிலும், கட்டமைப்பை உருவாக்கும் அரசின் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வருவதையே காட்டுவதாக தெரிவித்தார்.இன்று உலகிலேயே முன்னேறி நகரங்களின் பட்டியலில் நான்காவது நகரமாக சூரத் திகழ்வதாகவும், உலகில் விற்பனையாகும் வைரங்களில் 10-ல் 9 வைரங்கள் சூரத்தில் தயாரிக்கப்படுபவை என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். சூரத்தில் தொடங்கப்பட்டு உள்ள மெட்ரோ திட்டத்தின் மூலம் நாட்டின் மிக முக்கிய வர்த்தக மையங்களை இணைக்க வழி வகை ஏற்படும்என தெரிவித்த பிரதமர்,  நாட்டில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி வழங்கும் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் பா.ஜ.க. ஆட்சியில் நடைபெற்று கொண்டிருப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்