டெல்லியில் தடுப்பூசி திட்டம் தொடங்கியது - "வதந்திகளை நம்ப வேண்டாம்" கெஜ்ரிவால்

டெல்லியில் 81 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லியில் தடுப்பூசி திட்டம் தொடங்கியது - வதந்திகளை நம்ப வேண்டாம் கெஜ்ரிவால்
x
 டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுகாதார பணியாளர் மணிஷ் குமாருக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலெரியா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். மருத்துவமனையில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கிவைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இன்றுதான் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்திருப்பதாகவும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசி பயனளிக்கும் என்றும் கூறினார். டெல்லியில் 75 மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசியும், 6 மருத்துவமனைகளில் பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் தடுப்பூசியும் போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே  தடுப்பூசி வழங்கப்படுவதை பார்வையிட்ட அரவிந்த் கெஜ்ரிவால், தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர் எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்