தடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தடுப்பூசி திட்டத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்
x
கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதை தொடர்ந்து 16ஆம் தேதி தடுப்பூசியை வழங்கும் பணி தொடங்கும் எனமத்திய அரசு அறிவித்தது.  அதன்படி இன்று பிரதமர் மோடி நாடு முழுவதும் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள 3000த்திற்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இயக்குநர் ரந்தீப் குலேரியா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். பிற மையங்களிலும் மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழத்தில் 166 மையங்களில், 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்