களைகட்டிய போகி பண்டிகை கொண்டாட்டம் - பழைய பொருட்களை தீயில் எரித்த மக்கள்

பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று போகி கொண்டாடப்பட்டு வருகிறது.
x
பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று போகி கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையிலே எழுந்த மக்கள், தங்கள் வீடுகள் முன்பாக பழைய பொருட்களை எரித்து வருகின்றனர். மேலும், சிறுவர், சிறுமியர் மேளம் உள்ளிட்டவற்றை அடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

குடும்பத்துடன் போகி கொண்டாட்டம் - புதுமையை வரவேற்ற பொதுமக்கள்

ஒடிஷா மாநிலத்தில் பொதுமக்கள் போகி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தைப் போலவே ஒடிஷா மாநிலத்திலும், நான்கு நாட்களுக்கு பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் முதல் நாளான இன்று, கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து போகி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பொருட்களை எரித்த அவர்கள், புதுமையை வரவேற்றனர். 

போகி பண்டிகை கொண்டாட்டம் - வீடுகள் முன்பு எரிக்கப்பட்ட பழைய பொருட்கள்

மகா சங்ராந்தி பண்டிகையை முன்னிட்டு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் இன்று போகி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, விஜயவாடாவில், அதிகாலையில் எழுந்த மக்கள், தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தினர். மேலும், வீடுகள் முன்பாக பழைய பொருட்களை எரித்து, மக்கள் பண்டிகையை வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்