கொரோனா தடுப்பூசி விதிமுறைகள்

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தேர்வாகும் பயனாளிகள், செல்போன் மற்றும் ஆதார் எண்கள் இணைப்பதை, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசி விதிமுறைகள்
x
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசியை விநியோகம் செய்யும் பணிகளுக்கான நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் சுகாதார அமைச்சகம் இணைந்து செயல்பட துவங்கியுள்ளது. 

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக மத்திய சுகாதார அமைச்சகம்  ஆலோசனை நடத்தியது. 

அதில், தடுப்பு மருந்துக்கான தேசிய வல்லுநர் குழு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில முதன்மைச் செயலர்கள், தேசிய சுகாதார இயக்க இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தடுப்பு மருந்துகளை வழங்குவதில், முக்கிய பங்கு வகிக்கும் 'கோ-வின்' மென்பொருள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் பயனாளிகளை தெளிவாக அடையாளம் காணும் விதமாக, அவர்கள் குறித்த முழுமையான தகவல்களை டிஜிட்டல் ஆவணங்களாக சேமிப்பது மிகவும் முக்கியம் எனவும் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்