மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டலா? - நச்சுத்தன்மை கொண்ட தண்ணீர் எப்படி வந்தது?

புதுச்சேரி மாவட்ட ஆட்சியருக்கு நச்சுத்தன்மை கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டலா? - நச்சுத்தன்மை கொண்ட தண்ணீர் எப்படி வந்தது?
x
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தலைமையில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடந்தது. 

அப்போது ஆட்சியருக்கு, அலுவலக ஊழியர் ஒருவர் தனியார் நிறுவனத்தின் தண்ணீர் பாட்டிலை குடிக்க கொடுத்துள்ளார். 

ஒரு லிட்டர் அளவு கொண்ட அந்த தண்ணீர் பாட்டிலை ஆட்சியர் திறந்த போது அதில் நச்சுத்தன்மை கொண்ட திரவம் மிதந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். 

உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அலுவலக சிறப்பு அதிகாரி சுரேஷ் ராஜ், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

நிறமற்ற நச்சுத் தன்மை கொண்ட அந்த திரவமானது பாட்டிலின் உள்ளே வந்தது எப்படி? ஒரு வேளை இது ஆட்சியருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலா? என பல்வேறு கேள்விகள் எழுந்தன. 

இந்த சம்பவம்  அதிர்ச்சியளிப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்தவும் டிஜிபி உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியருக்கே நடந்திருக்கும் இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்