மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி

மகாராஷ்டிராவில் நடைபெற்ற கூட்டுறவு வங்கி விவகாரம் மத்திய பாஜக அரசுக்கும், மாநில சிவசேனா அரசுக்கும் இடையிலான மோதலாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடி
x
மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு வங்கி கடன் வழங்கியதில் சுமார் 4 ஆயிரம் கோடி மோசடி நடைபெற்றது அண்மையில் அம்பலமானது.

இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்த அமலாக்கத்துறை வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மனைவியின் கணக்கில் இருந்து சிவசேனாவின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மனைவி வர்ஷாவின் வங்கி கணக்கிற்கு சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பரிமாறி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பண பரிமாற்றம் தொடர்பாக சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை, அவரது 72 கோடி மதிப்பிலான சொத்துகளையும் முடக்கியது. 

மூன்று முறை சம்மன் அளித்த நிலையில்,கடந்த செவ்வாய் கிழமை ஆஜரான வர்ஷா ராவத்திடம் அமலாக்கத்துறையினர் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். மீண்டும் வரும் 11ந் தேதி ஆஜராகுமாறு வர்ஷா ராவத்துக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இந்த சம்பவங்கள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிவசேனா கட்சி, ஆளும் கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டியது. 

மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று முக்கிய ஆவணங்களை பெறுவதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். 

எங்கள் குடும்ப பெண்களை அவமானப்படுத்தி, கீழ்தரமான விளையாட்டில் பாஜக ஈடுபடுவதாக சஞ்சய் ராவத் சாடினார்.

மகாராஷ்டிரா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை பற்ற வைத்திருக்கிறது, வங்கி முறைகேடு வழக்கு..

Next Story

மேலும் செய்திகள்