இந்திய நிறுவனங்கள் மீது மட்டும் உலக நாடுகள் பாரபட்சம் காட்டுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கொந்தளித்துள்ளார்

இந்திய நிறுவனங்கள் மீது மட்டும் உலக நாடுகள் பாரபட்சம் காட்டுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா யெல்லா கொந்தளித்துள்ளார்... இதுகுறித்து பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
இந்திய நிறுவனங்கள் மீது மட்டும் உலக நாடுகள் பாரபட்சம் காட்டுவதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கொந்தளித்துள்ளார்
x
கொரோனாவுக்கு எதிரான நீண்ட நெடிய போரில் 8 மாதகால கடின உழைப்பு மற்றும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ-டெக் நிறுவனம் தயாரித்து வரும் கோவேக்சின் மற்றும் புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து வரும் கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு இந்த செய்தி வரவேற்பை பெற்றாலும் விமர்சனங்களும் எழாமல் இல்லை.

3-ஆம் கட்ட பரிசோதனை நிறைவடையவில்லையே? பாரத் பயோ டெக் நிறுவனத்தின் தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. 

இது ஒருபுறம் இருக்க, உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், பாஜகவின் இந்த தடுப்பு மருந்தின் மீது நம்பிக்கை இல்லை... நான் தடுப்பூசி போட்டுக் கொள்ள போவதில்லை என கூறி பரபரப்பை பற்றவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்