கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
x
கொரோனா  தடுப்பூசியை, நாட்டு மக்களுக்கு வழங்கிட மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. இந்நிலையில்,  இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு மற்றும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் எனவும் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியது. இது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி, கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்துகளின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ததாக கூறினார். இந்த ஆய்வின் முடிவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது என அவர் கூறினார். இந்த இரண்டு மருந்துகளும், இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்றும், இந்திய மருந்து கட்டுப்பாட்டுக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்