இந்திய கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்!
பதிவு : ஜனவரி 03, 2021, 09:05 AM
இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சுப்மன் கில் உள்ளிட்ட 5 பேர் ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு நாள் போட்டி, டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க, ஆஸ்தி​ரேலியா சென்றுள்ள இந்திய அணி, இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது.

டெஸ்ட் தொடரில் இரு அணிகளும், 1க்கு1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. 3வது டெஸ்ட் போட்டி வரும் 7 ந் தேதி முதல் சிட்னியில் நடைபெறள்ளது.

இந்தநிலையில் அங்கு தங்கி உள்ள இந்திய வீரர்களில் சிலர்,
புத்தாண்டு தினத்தன்று, உணவருந்துவதற்காக ஹோட்டல் ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

மெல்போர்னில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 

அந்த வீடியோவில், இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா உள்பட ரிஷப் பண்ட், சுப்மன் கில், பிரித்வி ஷா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக கூறி, அந்த 5 பேரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆஸி. கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

181 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

141 views

பிற செய்திகள்

சிலை போல நின்ற கிரிக்கெட் வீர‌ர்கள் - தமிழக கிரிக்கெட் வீர‌ர்களின் குறும்புத்தனம்

சிலை போல நின்ற கிரிக்கெட் வீரர்களின் குறும்புத்தனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.தமிழ்நாடு கிரிக்கெட் அணி வீர‌ர்கள் உடற்பயிற்சி செய்த போது statue கேம் விளையாடியதை முருகன் அஸ்வின் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

29 views

புஜாராவை புகழ்ந்த தினேஷ் கார்த்திக் - வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் வீரர் புஜாராவை புகழ்ந்து தினேஷ் கார்த்திக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

62 views

மச்சா, நான் பார்த்துக்கொள்கிறேன் - களத்தில் சுந்தர் பேசியதை பகிர்ந்த ரிஷப்பண்ட்

வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடியது இலக்கை சேஸ் செய்வதற்கு உறுதுணையாக இருந்ததாக இளம் வீரர் ரிஷப் பண்ட் கூறியுள்ளார்.

6187 views

சென்னை வந்தடைந்த இங்கிலாந்து அணி

சென்னையில் வருகிற பிப்ரவரி 5 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

45 views

14 வது ஐ.பி.எல். வீர‌ர்களுக்கான 'மினி' ஏலம் - சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டம்

14 வது ஐ.பி.எல்.சீசனுக்கான மினி ஏலம் பிப்ரவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் சென்னையில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

21 views

சென்னை அணியில் நீடிக்கிறார் ரெய்னா

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீர‌ர்களை விடுவித்துள்ளது.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.