பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் தடுப்பூசி - நிபந்தனையுடன் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி

பாரத் பயோ-டெக் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிக்கு நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்க நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
பாரத் பயோ-டெக் நிறுவனத்தின் தடுப்பூசி - நிபந்தனையுடன் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி
x
ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோ-டெக் நிறுவனம், தமது தயாரிப்பான கோவக்சின்  தடுப்பூசியை, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்குமாறு விண்ணப்பித்திருந்தது.

இதனை பரிசீலித்த மத்திய மருந்து தரம் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் நிபுணர் குழு,  நிபந்தனைகளுடன் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கலாம் என பரிந்துரை வழங்கியுள்ளது.

இதேபோல, இந்திய சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை, அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கலாம் என நிபுணர் குழு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது.

ஆனால், இது குறித்த இறுதி முடிவை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் விரைவில் தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்