"ஜனவரி 1ஆம் தேதி மட்டும், 3 லட்சத்து 71 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும்" - யுனிஸெஃப் நிறுவனம்

உலகம் முழுவதும் ஜனவரி 1ஆம் தேதி மட்டும், 3 லட்சத்து 71 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் என யுனிஸெஃப் நிறுவனம் கணித்துள்ளது.
ஜனவரி 1ஆம் தேதி மட்டும், 3 லட்சத்து 71 ஆயிரம் குழந்தைகள் பிறக்கும் - யுனிஸெஃப் நிறுவனம்
x
உலக குழந்தைகள் பாதுகாப்பு நிதியகமான யுனிஸெஃப்,  தனது 75 ஆம் ஆண்டை கொண்டாடுகிறது. இதைத் தொடர்ந்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

உலகம் முழுவதும் ஜனவரி ஒன்றாம் தேதி மட்டும் 3 லட்சத்து 71 ஆயிரத்து 504 குழந்தைகள் பிறக்கும் என கணித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் முதல் குழந்தை பிஜி தீவிலும், கடைசிக் குழந்தை அமெரிக்காவிலும் பிறந்துள்ளதாக தெரிவித்துள்ள யுனிஸெஃப் நிறுவனம், 

இந்தியாவில், 59 ஆயிரத்து 995 ஆகவும், சீனாவில், 35 ஆயிரத்து 615 ஆகவும், நைஜீரியாவில் 21 ஆயிரத்து 439 ஆகவும் குழந்தை பேறு இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.  பாகிஸ்தானில், 14 ஆயிரம், இந்தோனேசியா மற்றும்  எத்தியோப்பியாவில் தலா 12 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளது என புள்ளிவிவரம் வெளியிட்ட யுனிஸெஃப் நிறுவனம்,

அமெரிக்கா, எகிப்து, வங்கதேசம் மற்றும் காங்கோவில் 10 ஆயிரத்துக்கும் குறைவான குழந்தைபேறு என குறிப்பிட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்