வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் - கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறக் கோரி, கேரளா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் - கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
x
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற கேரள சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அவை தொடங்கியதும் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். நாட்டில் தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடரும் நிலையில், கேரள மாநிலத்துக்கு அண்டை மாநிலங்கள் உணவுப் பொருட்களை நிறுத்தினால், கேரள மக்கள் உணவின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகும் என ​முதலமைச்சர் பினராயி விஜயன் சுட்டிக்காட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள, 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு விரோதமானது என்றும், பெரிய வர்த்தக குடும்ப குழுமங்களுக்கு உதவும் வகையில் உள்ளதாகவும் பினராயி விஜயன் குற்றம்சாட்டி உள்ளார். தொடர்ந்து வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்