கொரோனா தடுப்பூசிகள் - மத்திய அரசு அறிவுறுத்தல்

கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் அவசர கால அடிப்படையில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி கோரிய நிலையில் கூடுதல் தகவல் தரவுகளை சமர்ப்பிக்க மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் - மத்திய அரசு அறிவுறுத்தல்
x
இந்தியாவில் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு நிலைகளில் பரிசோதனையில் இருந்தாலும்,கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஃபைசர் ஆகிய மூன்று தடுப்பூசிகளை அவசர கால அடிப்படையில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி, மருந்து நிறுவனங்கள் விண்ணப்பம் அளித்து இருந்தன. 

மூன்று தடுப்பூசிகளையும், அவசரகால அனுமதி அளிப்பது தொடர்பாக 2 வாரங்களுக்கு முன்பு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய நிபுணர் குழுவான மத்திய மருந்து தர மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் ஆய்வு செய்தது.முந்தைய ஆய்வின்போது நிறுவனங்கள் சமர்ப்பித்த தரவுகள் போதுமானதாக இல்லாததால், மேலும் கூடுதல் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதி அளித்த நிலையில்,
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

கோவிஷீல்டு மட்டுமின்றி பாரத் பயோகான் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கான விண்ணப்பங்களும் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் இரு நிறுவனங்களும் திருத்தி அமைக்கப்பட்ட தரவுகள், இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் கிடைத்த முடிவுகள் ஆகியவற்றை அளித்தன.

ஆனால் கூடுதல் தரவுகள் தேவைப்படுவதாலும், மருந்து நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ள தரவுகள் குறித்து ஆய்வு செய்ய கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாலும், அனுமதி அளிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், கூடுதல் விவரங்களையும், தரவுகளையும் தாக்கல் செய்யும் படி மருந்து நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தர மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு குழு ஜனவரி 1ந் தேதி மீண்டும் கூடி ஆலோசிக்க உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்