கார்களில் முன்பக்க இருக்கைகளில் 2 ஏர்பேக் கட்டாயம்... நாட்டில் விரைவில் வருகிறது புதிய சட்டம்

நாட்டில், விற்பனைக்கு வரவிருக்கும் கார்களில் முன்பகுதியில் உள்ள 2 இருக்கைகளில் ஏர்பேக் கட்டாயம் என சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
கார்களில் முன்பக்க இருக்கைகளில் 2 ஏர்பேக் கட்டாயம்... நாட்டில் விரைவில் வருகிறது புதிய சட்டம்
x
கார்களில் பயணம் செய்யும் பயணிகள்  பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, கடந்த ஆண்டு கார்களில் ஓட்டுனர் இருக்கை அருகே ஏர்பேக் அமைப்பது  கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், முன்பக்க​ம் கார்களில் 2 ஏர்பேக் அமைக்க வேண்டும் என விரைவில் சட்டம் கொண்டு வர மத்திய அரச திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அரசாணையை, மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. புதிய வகை மாடல் கார்களில் 2021 ஏப்ரல் ஒன்றாம் தேதி முதலும், ஏற்கனவே உள்ள கார்களில் 2022 ஜூன் ஒன்றாம் தேதி முதலும் முன்பக்க பயணிகள் இருக்கைகளிலும் ஏர் பேக் அமைக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சிறிய ரக கார்களின் விலை ரூ.5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறிய ரக கார்கள் விபத்தில் சிக்கும் போது முன்பக்கம் அமர்ந்து இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை என கூறப்படும் நிலையில், 
வாகன உற்பத்தியாளர்கள் மற்றும்  பொது மக்கள் தங்களுடைய கருத்துகளை அளிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்