"அப்பாவி விவசாயிகளை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர்" - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

அப்பாவி விவசாயிகளை, சிலர் தவறாக வழிநடத்துவதாகவும், வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின், விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அப்பாவி விவசாயிகளை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
அப்பாவி விவசாயிகளை, சிலர் தவறாக வழிநடத்துவதாகவும்,  வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின், விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்தில், பாஜக அரசு பொறுப்பேற்று  3-ம் ஆண்டு நிறைவு பெறுகிறது.இதையொட்டி ராஜ்நாத்சிங், காணொலி மூலம் பங்கேற்று பேசினார். அப்போது, மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு இமாச்சல பிரதேசத்திற்கு 22 ஆயிரம் கோடி ரூபாய் வளர்ச்சி நிதி ஒதுக்கப்பட்டதாக கூறினார். மேலும் ஏராளமான திட்டங்களும் அங்கு செயல்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்