கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை - ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க புதிய சட்ட மசோதா

கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கட்டாய மத மாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை - ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க புதிய சட்ட மசோதா
x
மத்திய பிரதேச மாநிலத்தில் திருமண வயதிற்குட்பட்ட இளம்பெண்களை  
கட்டாய மதம் மாற்றம் செய்து பலர் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்காக இத்தகைய மதமாற்ற செயல்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. 

போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டோரின் புகார்கள் குவிந்தன. இதையடுத்து கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும்  அளிக்க வகை செய்யும் புதிய சட்ட மசோதாவுக்கு மத்தியப் பிரதேச மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிலராஜ்சிங் சவுகான், முந்தய சட்டத்தை கடுமையாக்கி புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்